Tuesday, 6 November 2012

நம் தேசத்தில்... பலர் இன்றும்...


இப்படி நம் தேசத்தில் பல இடங்களிலும் பலர் இன்றும் இறந்து கொண்டு தான் உள்ளனர்...


காக்க வேண்டிய வாய்ப்பு உள்ளவர்கள...
 சொகுசு அறையில் சிந்தித்து,

எழுதி தருபவரின் வாக்கியங்களை, 

உற்சாக பானத்தின்....மயக்கத்துடன்.,
உரக்கப் பேசிவிட்டு...

வேரின உடலுடன்
உறங்கி விடுகின்றனர்...

வசதி படைத்தோரும்....
வசதி வாய்ப்புகளை பெருக்குவதிலேயே....
பெரிதாய் ஈடுபாடு கொள்கின்றனர்...

உழைக்கும் பாமரனை,இறுதிவரை
ஏழைகளாவே வைத்திருக்கும்

ஆசைப்படும்
வசதி படைத்தோரின்
பொருளாதார,
வாய்க்காலை உடைக்கும் ..

சிறு மண்வெட்டியாய், பிறக்கவே.....
இறக்கத்
துடிக்கும் உங்களில் ஒருவன்....
                       
                                                           ---ஆருத்ரன்^

No comments:

Post a Comment