Wednesday, 8 May 2013

மாற வேண்டிய சனநாயகத்தின் ''நான்காம் தூண்''

மக்களில் ஒருவன்:::::௧௦௯ 109:


சமீபத்தில் நான் கேட்டு ஆச்சர்யப்பட்ட வரிகள்
சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்...

|| வெறும் வயிற்றுப் பொழப்பிற்காக நடிக்க வந்துள்ள எங்களை 
நீங்கள் பேட்டி காண்பதை விட, நமது வயிற்றுப் பாட்டிற்கான 
உணவினை விளைவிக்கும் விவசாயியினை நேர்காணல் 
செய்யுங்கள்., விவசாயத்தில் முன்னேற்றம் வரும்.

#நடிகர் ''Counter''மணி (கவுண்டமணி) ||

நான் அறிந்து தனது புகழைப் பற்றி கவலைப்படாமல் இப்படி துணிவுடன் பேசும் மூன்றாவது  நடிகர் இவர்.. ''எண்ணித் துணிக கருமம்'' என்பது நடிகர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் பெருவாரியாக நசிந்தே வருகிறது... புகழுக்காகவும், பதவிக்காகவுமே மட்டும் சில நேரங்களில் துணிந்து பேசுவதும்; அவர்களின் சுயநலத் தன்மைகளும்,அவர்களுள் ஒருவர் இப்படி பேசும் போது பளிச்சென்று தெரிகிறது.

நமக்கான நடிகன் நம்மையே மதிப்பான் என்றும், நமக்காகவே வாழ்வான் என்றும், நமது முந்தைய தலைமுறை தங்கள் எதிர்ப்பார்ப்புகளை எங்கோ
சென்று பதியத் துவங்கியதன் விளைவே.,

இன்றைய தமிழகத்தில் பத்திரிக்கைகளுக்கு விவசாயியின் முக்கியத்துவத்தை ஒரு நடிகர் சொல்லி தெரியவேண்டியுள்ளது.. ஆரம்பத்தில் மக்களின் ரசனையை சினிமா பக்கம் இழுத்துவிட்ட நம் பத்திரிக்கை துறை., இன்று மக்கள் அதைதான் விரும்புகின்றனர் என்று ஏமாற்றமுடியாது.

சினிமா சுவடே இல்லாத சில பத்திரிக்கை தொலைக்காட்சிகளும், சமீபத்தில் துவங்கப்பட்டு சிறப்பான வரவேற்ப்பையும் பெற்றுள்ளது... குறிப்பாக தமிழ் ஓசை,புதிய தலைமுறை போன்ற பத்திரிக்கைகள் சினிமா என்பதை விடுத்து., விவசாய மக்களுக்கு பெருமுக்கியத்துவத்தை அளித்துவருகிறது... அனைத்து மக்களும் அதை விரும்பி படிக்கவும் செய்கின்றனர்

சனநாயகத்தின் ''நான்காம் தூண்'' எனப்படும் ஊடகத்துறையே சற்று பெருவாரி மக்களுக்கும் தேவையான விடயங்களை பதியுங்கள்... மக்களுடன் தனித்து நிற்காமல் என்றும் இணைந்தே செயல்படுங்கள்


- ஆருத்ரன்^

No comments:

Post a Comment