கர்மவீரர் Vs மக்கள் திலகம் ஒப்புமை தேவையா?!!
சமீப காலத்தில் சட்டமன்ற நிகழ்வுகளில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அதிமுக தனது இறந்த கால தற்பெருமைகளை பேசிக்கொண்டும் MGRயும் காமராஜரையும் ஒப்புமை படுத்தி மக்களுக்கான சபையில் தேவையற்ற வீண்விவாதங்களை தமிழக காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி விவாதித்துக்கொண்டுள்ளனர்...
அண்ணா & பெரியாரின் பொதுநல கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட திராவிட தமிழ் உணர்வாளர் MGR. அண்ணாவின் மேல் மிகப்பெரிய மதிப்பு கொண்டவர் MGR.
அதில் சிறு மாற்றமும் இல்லாமல் அதே மதிப்பை காமராஜர் மீதும் MGR வைத்திருந்தார் என்பது வரலாறு படித்தால் புரியும்...
''தங்களின் பணிக்காலம் இன்னும் முடிவுறவில்லை.. இப்போதைக்கி தேர்தல் வேண்டாம் என்று காமராஜரிடம் நேரடியாக சென்று பேசிய ஒரே திராவிட கட்சிகாரர் MGR. உண்மையில் மக்கள் மீதான பரந்த எதார்த்தமான மனப்பான்மையில் MGR என்றுமே முதலிடம் தான்.. ஆனால் MGRருடைய தலைவர்கள் என்ற மதிப்பு அண்ணாவிற்கும்,காமராஜருக்கும், மட்டுமே நேரடியாக வாய்த்த ஒன்று...அதை வெளிப்படையாக கூறியவர் MGR. அதனாலேயே மக்கள்திலகம் எனும் பெயர் வலுப்பெற்றது.
ஆனால் இன்று MGR காலத்திய முழு வரலாறுகள் தெரியாத ஜெயலலிதாவின் அதிமுக ., அனாவசியமாக MGRயும் & காமராஜரையும் ஒப்புமை படுத்துகின்றனர்...அதேபோல் தான் இன்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ்.. அன்று இருந்த தலைமையின் தகுதிகளை பேச இவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்றால் துளியும் இல்லை..
உண்மையில் அனைத்து மக்களையும்,அவர்களின் தேவைகளையும் முழுமையாக புரிந்து பொதுநல கருத்துக்களை எதார்த்தமாக ஏற்று பின்பற்றியவரும்(MGR), அனைத்திந்திய அரசியல் கோட்பாடுகளையும்,
மக்களுக்கு உதவும் அரசியல் & நிதி கொள்கைகளை நியாயமாக வழங்கியவரும்(காமராஜர்)...ஒப்புமை கூறவியலாத இரு கண்கள்..
இருவரையும் அவரவர்கள் நிலைகளுக்கு சென்று கூர்ந்து கவனித்தால் தெரியும் இருவருமே...சிறந்த தலைவர்கள்
இவர்களுக்கிடையில் ஒப்புமை தேவையற்றது...





.jpg)

No comments:
Post a Comment