Monday, 22 April 2013

புண்ணியந் தாண்டிய புனிதத்திற்கு மாறுவோம் மனிதமே...


புண்ணியந் தாண்டிய புனிதத்திற்கு மாறுவோம் மனிதமே...





2030க்குள் உலகில் இருந்து ஏழ்மையை அகற்ற உலகவங்கி திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ஜிம்-யான்-கிம் அறிவித்துள்ளார்
அது சாத்தியமே இல்லையென்பது அவருக்கே தெரியும்... ஆனாலும் நம்பிக்கையில் தெரிவித்துள்ளார்...அதே நேரம் அந்த வங்கி மனது வைத்தால் 2030க்குள் உலகின் உணவு பற்றாக்குறையை தீர்க்கலாம்....சற்று சிந்தித்து பாருங்கள்...உலகில் உலகளாவிய சுகாதாரம் மையம் உள்ளது...உலகளாவிய வர்த்தக மையம் உள்ளது, உலகளாவிய மனித உரிமைகள் மையம் உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.நாசபையும் உள்ளது....ஆனாலும் உலகில் பட்டினி சாவுகள் குறைந்தபாடில்லை. குறிப்பாக  நம் ஆப்பரிக்க கண்டத்தின் பல நாடுகளில் நமது மனித இனம் மாறுபாடு இல்லாமல் மடிந்து சாகிறது....



ஆனாலும் வளர்ந்த நாடுகள் உலக நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத வளர்ச்சிகளை மட்டுமே மிக முனைப்புடன் கவனித்து, தன்னிறைவு பெற்றும் மேலும் மேலும் பேரு-வளர்ச்சிகளை நோக்கிய நகர்ந்தவண்ணம் உள்ளது... உணவின்றி சாகும் மக்களின் வாழ்நிலையை மாற்ற அத்தகைய நாடுகள் என்னமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது வெளிச்சாமாகவில்லை... பில்கேட்ஸ்,போன்ற உயர்நிலை பொருளாதாரம் கொண்ட மனிதர்களும், நாடுகளும் உலகில் நிறைய உண்டு; அவர்களால் செய்யப்பட்ட பெருவாரி நல்லவைகளை பத்து விரல்களுக்குள் அடக்கி சொல்லிவிடலாம்... ஆனால் பிரிவினைகள் மற்றும் மதத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சில நாடுகளும், நபர்களும் சொல்லிலடங்கா தூரம் செலவிடுகின்றனர்... உலகின் பேரழிவுகள் நடக்கும்வரை பணத்தையும், மதத்தையும்,பதவியையும் பாதுகாக்கும் செயற்கையான கவுரவ முட்டாள் தனங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்... இறக்கங்கள் இறந்துகொண்டே வரும் இன்றைய காலக்கட்டத்தில்,அரிதாக  மக்கள் மனதினில் பிறக்கும் ஒவ்வொரு சிற்சில மனிதநேயங்களும்,சில நிமிடபொழுதுகளில் மங்கி மறைந்துவிடுகின்றன...



மேற்கூறிய எல்லாமும் உலகளாவிய அமைப்புகளுக்கும், உலக வங்கிகளுக்கும், உலக பணக்காரர்களுக்கும் தெள்ளத்தெளிவாக தெரியும்....அவர்களால் உலகின் உருண்டுகொண்டிருக்கும் உணவின்றி இறக்கும் ஊனங்களை உடைத்தெறிய முடியும்..அதை அவர்களும் உணராமல் இல்லை. ஆனாலும் பட்டினிச்சாவுகளை  ஒழிக்க எங்கோ முட்டுக்கட்டை விழுந்த வண்ணமே உள்ளது. அது
''தேறாத பணநிலை என்போர் சிலர்;;ஆனால் உண்மையில்
மாறாத மனநிலையுமல்லவா! காரணமாக தான் உள்ளது!!''
உள்ளத் தனையது உயர்வு,என்பதற்கொப்ப இறந்த இயேசுவையும், காந்தியையும் பற்றியே  என்றும் பெருமைகள் பேசி உயர்த்தி வைத்துக் கொண்டிருக்காமல், இன்றும் இறந்துகொண்டிருக்கும் சக மானிடர்களை காத்தருள உங்களுக்குள்ளும் தெய்வங்களை உருவாக்குங்கள்... ஒளியைநோக்கி வாருங்கள்!!
''மடிந்து மண்ணில் மாய தான் போகிறோம்;
  புண்ணியந் தோண்டிய புனிதமாய் போவோமே; சிந்தியும் மனிதமே!!''

அன்புடன் ஆருத்ரன்^

No comments:

Post a Comment