Tuesday, 13 November 2012

சிங்களத்தின் எல்லை தாண்டிய பயங்கர வாதம் £50000


சிங்களத்தின் எல்லை தாண்டிய பயங்கர வாதம் £50000




சிங்களத்தின் எல்லை தாண்டிய பயங்கர வாதம் அம்பலத்துக்கு வந்தது.. பிரான்சில் சுட்டுக் கொல்லப் பட்ட கேணல் பருதி அவர்களை கொன்ற சந்தேக நபர்களை பிரஞ்சு காவல் துறையினர் துரித கெதியில் செயற்பட்டு கைது செய்துள்ளார்கள் ...

இக்கொலையை சிறிலங்கா அரச பயங்கரவாதிகளே முன்னின்று   நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது .
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் பரிதி அவர்களின் கொலையாளிகளுக்கு ஐம்பதுனாயிரம் யூரோக்களை சிங்கள அரசு சன்மானமாக வழங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பிரெஞ்சுக் காவல்துறையினரால்Villeneuve-Saint-Georgesல் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பாரிஸ் லாச்சப்பல் (பரிஸ் - 18) பகுதியில் பிறிதொரு சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
33 அகவையுடைய சிறீலங்கா குடியுரிமையுள்ள சந்தேக நபர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கொலைக்கு 
£50000 யூரோ சன்மானமும், சிறீலங்காவில் தமக்கு சுகபோக வாழ்க்கையை ஏற்பாடு செய்து தருவதாக சிங்கள அரசு இவருக்கு உத்தரவாதம் அளித்ததாகவும் தெரிய வருகின்றது.


கேணல் பரிதி கொலை தொடர்பான விசாரணைகள் மிக முக்கியமான பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கைது தொடர்பான பிரத்தியேகமான செய்தியை நேற்று சங்கதி24 இணையம் வெளியிட்டிருந்த நிலையில் இதனை மிகைப்படுத்தி கற்பனைச் செய்திகள் சிலவற்றை உடனடியாகவே சில தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன. எனினும் இக்கற்பனைச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை சங்கதி24 இணையம் உறுதி செய்கின்றது.


இந்நிலையில் அம்பலத்துக்கு வந்துள்ள சிறிலங்காவின் எல்லை தாண்டிய அரச பயங்கரவாதம், சிறிலங்கா அரசாங்கத்துக்கு - பிரென்சு அரசுக்கு இடையில் கடுமையான இராஜதந்திர நெருக்கடியினைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்கள் சட்டத்துக்கு புறம்பான முறையில் பிரான்சுக்குள் உள்நுழைந்துள்ளதோடு, சட்டத்துக்கு புறம்பான முறையிலேயே பிரான்சில் தங்கியிருந்துள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தி ஆதாரம் Le Parisien



சிறு வயது
தளபதி கேணல் பரிதி தோழர்  படம்...

No comments:

Post a Comment