Wednesday, 30 January 2013

எது இப்போது நாட்டுக்குத் தேவை!!?!

எது இப்போது நாட்டுக்குத் தேவை!!!?!?!






திரைக்கலையின் நிலைக்கலைஞன் ஒருவரின் திரைப்படத்தின் மீதான அனைத்து மக்களுக்கான அரசு கொடுத்த தடையினை இரவு 10.00மணிக்கு தற்காலிகமாக உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது....ஆனால் அதை நள்ளிரவே....மேல் முறையீடு செய்தது தமிழக அரசு....என்ன ஒரு அபாரமான வேகம்....


இப்படியெல்லாம் ஒரு விடயம் நடந்து கொண்டிருந்த போதுதான் இன்னொரு தீர்ப்பும் மற்றொரு நீதிமன்றத்தில் வெளியானது...அதாவது கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற்றுத்தர தமிழக அரசின் வழக்கில்,எங்களால் பெற்றுத் தர முடியாது என கைவிரித்திருக்கிறது அந்த நீதிமன்றம்... அதற்கான பதில் முறையிடோ, மேல் முறையீடோ தமிழகஅரசு செய்ததாக இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை..

மனம் வலிக்கிறது....இதுவரை 15 விவசாயிகள் காவேரி டெல்டா பகுதியில் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்... தாமதமாக. குருவை துவங்கி இன்று சம்பா முடியும் வரை இந்த பிரச்சனையை கையிலெடுத்து அரசு கையாள்வதை பார்த்தால்...வெறும் அரசியல் மட்டுமே தெரிகிறது...ஆம்...குருவை துவங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே காவேரி நடுவர் மன்றத்தை தீவிரமாக அணுகி பிறகு உச்ச நீதிமன்றம் சென்றிருந்தால் குருவை,சம்பா'வை காப்பாற்ற முடியவில்லை என்றாலும்....விவசாயிகளின் தற்கொலையையாவது தடுத்திருக்கலாம்...

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இளைய தலைமுறையோ,விவசாயிகளின் குழந்தைகளோ கட்டாயம் விவசாயம் செய்ய முன்வராது...சிறுவிவசாய நிலங்கள் விட்டுமனைகளாக மாறும்...அடிப்படை அரிசியின் விலை 50ரூபாயை தாண்டும்...பிற மாநில அரசிகளும்,இறக்குமதி அரிசிகளும் விரைவில் வரும்...

அப்படியொரு நிலை ஏற்பட்டால் தமிழகத்திலிருந்து பிற மாநில குடிபெயர்வுகளும், இந்தியாவிலிருந்து பிற தேச குடிபெயர்வுகளும்....இயல்பாக ஏற்படும்...இப்படி மிகப்பெரிய சிக்கல் உள்ள மக்களின் வாழ்வாதார உணவு தொடர்பான விடயங்களில் அக்கறை கொள்ளாமல்...பொழுதுபோக்கு கலையின் மீதும் கலைஞனின் மீதும் மிக தீவிரம் காட்டுவதை பார்த்தால்... 

சில ஊடக செய்திகள் சொல்வது போல் ஆளுங்கட்சியின் தனியார் தொலைக்காட்சிக்கு படத்தின் உரிமை தராததே.... காரணமாக இருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது... எது எப்படியோ... மக்களின் வாழ்விற்கு தேவையற்ற விடயங்களில் அரசு தீவிரமாய் தன் விருப்பப்படி நடந்து கொள்கிறது....தேவையான வாழ்வாதார பிரச்சனையில் பொறுமையாக நடந்து விவசாயத்தை கொல்கிறது!!!
                                 

                                                                              -ஆருத்ரன்^

No comments:

Post a Comment